1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 21 டிசம்பர் 2023 (11:46 IST)

ராமர் கோவில் கும்பாபிஷேகம்: சோனியா காந்திக்கு அழைப்பு விடுத்த அறக்கட்டளை குழு..!

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் நிலையில் இந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள பல முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. 
 
இந்த கும்பாபிஷேகத்தில் பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி, ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் சோனியா காந்தி உட்பட எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது. காங்கிரஸ் பிரமுகர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி ஆகியோர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளனர். 
 
ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு சோனியா காந்தி,  ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உடன் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran