மக்களவையில் மேலும் 2 எம்பிக்கள் சஸ்பெண்ட்.. பதாதைகளை ஏந்தி போராடியதால் நடவடிக்கை..!
நாடாளுமன்றத்தில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது கேரளாவை சேர்ந்த மேலும் 2 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து ஏராளமானோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
திமுக எம்பி கனிமொழி உள்பட 150 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது கேரளாவை சேர்ந்த இரண்டு காங்கிரஸ் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கேரளாவை சேர்ந்த தாமஸ் சாழிக்கடன் மற்றும் ஏ.எம். ஆரிஃப் ஆகிய இரண்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்,
சஸ்பெண்ட் செய்யபப்ட எம்.பி தாமஸ் சாழிக்கடன் செய்தியாளர்களிடம் கூறியபோது, ”எதிர்க்கட்சிகளின் ஒரே கோரிக்கை உள்துறை அமைச்சர் அமித்ஷா அவைக்கு வந்து, நாடாளுமன்ற விதுமீறல் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும்” என தெரிவித்தார்.
Edited by Mahendran