1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified செவ்வாய், 17 ஜனவரி 2023 (15:31 IST)

குஜராத்: காற்றாடி விடும் திருவிழாவில் 6 பேர் பலி

gujarath
குஜராத் மாநிலத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இம்மா நிலத்தில் உள்ள உத்தராயண பண்டிகையின் போது,  மக்கள் காற்றாடிகளை பறக்கவிட்டு கொண்டாடுவர்.

இப்பட்டம் விடுவதால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

அந்த வகையில், இப்பட்டம் பறக்கும்போது, 3 குழந்தைகள் உட்பட மொத்தம் 6 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 176 பேர் காயமடைந்துள்ளதாக குஜராத் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மஞ்சாநூல் கழுத்தில் அறுத்து 130 பேர் காயமடைந்துள்ளனர். பட்டம் விடும் போது உயரமாக இடங்களில் இருந்து தவறி விழுந்து 46 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.