திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 14 ஜனவரி 2023 (22:52 IST)

ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித்மோடி மருத்துவமனையில் அனுமதி...

lalit modi
ஐபிஎல் விளையாட்டை அறிமுகம் செய்து, பணமோசடியில் சிக்கி இந்திய புலனாய்வு அமைப்பினால் தேடப்படும் குற்றவாளியாக உள்ளார்.

முன்னாள் தலைவர் லலித் மோடி கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல்  முன்னாள் தலைவர் லலித் மோடி சமீபத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டார்.

அத்துடன் இரண்டு வாரத்திற்கு முன்  நிமோனியாவாலும் அவர் பாதிக்கப்பட்டதாலும்  மெக்சிகோவில்  சிகிச்சை பெற்ற பின்னர் இங்கிலாந்து நாட்டிற்குத் திரும்பினார்.

தற்போது, லண்டனில் உள்ள மருத்துவமனையில் உடல்  நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் ஐசியுவில் 24 மணி நேரமும் ஆக்சிஜன் உதவியுடன் சுவாசித்து, சிகிச்சை பெற்று வருவதாக அவரே தன் இன்ஸ்டா  பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.