விநாயகர் ஊர்வலத்தில் மோதல்; இரு பிரிவினர் மோதலால் 13 பேர் கைது!
நாளை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் குஜராத்தில் இன்று விநாயகர் ஊர்வலத்தில் மோதல் எழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பல இடங்களில் பல விதமான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அதை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
நாட்டின் பல பகுதிகளில் பெரிய விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகின்றன. இந்நிலையில் குஜராத் மாநிலம் வதோதரா நகரில் பானிகேட் பகுதியில் விநாயகர் ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. அப்போது இரு தரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போலீஸார் 13 பேரை கைது செய்துள்ளனர். அதை தொடர்ந்து பேசியுள்ள வதோதரா காவல் இணை ஆணையர் “இருதரப்பினர் இடையே எழுந்த மோதல் தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிலமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் புரளிகளை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.