ஓடும் ரயிலில் பெண் காவலரை கத்தியால் குத்திய மர்ம நபர் கைது!
சென்னையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஓடும் ரயிலில் மர்ம நபர் ஒருவர் பெண் காவலரை கத்தியால் குத்திய நிலையில் அந்த மர்ம நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் ரயில் நின்று கொண்டிருந்த போது பெண்கள் பெட்டியில் ஆண்கள் சிலர் ஏறினர். இதனை பெண் காவலர்கள் கண்டித்த நிலையில் மர்ம நபர் ஒருவருக்கும் பெண் காவலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஓடும் ரயிலில் வந்த மர்ம நபர் பெண் காவலரை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி விட்டார், இதனை அடுத்து ரத்த வெள்ளத்தில் இருந்த பெண் காவலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
இந்த நிலையில் பெண் காவலரை கத்தியால் குத்தியவர் தனசேகரன் என்று தெரிய வந்ததை அடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.