ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (09:19 IST)

லிப்டில் சிக்கிய நபரை காப்பாற்றியவரை சரமாரியாக அடித்த நபர்: போலீசார் அதிரடி கைது!

Liftman
லிப்ட்டில் சிக்கியவரை காப்பாற்றிய லிப்ட்மேனை குடியிருப்புவாசி ஒருவர் சரமாரியாக தாக்கிய சிசிடிவி காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
அரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வருண் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிலிருந்து லிஃப்டில் கீழே இறங்கிக் கொண்டிருந்தபோது திடீரென லிப்ட் ரிப்பேர் ஆனது
 
இதனால் 4 நிமிடம் லிப்டில் அவர் சிக்கிக் கொண்டார். இந்த நிலையில் லிப்டின் கோளாறை சரிசெய்து கதவை திறக்க லிப்ட்மேன் உதவி செய்தார். இதனை அடுத்து லிப்டில் இருந்து வெளியே வந்த வருண், லிப்ட்மேனை சரமாரியாக தாக்கி தகாத வார்த்தைகளில் திட்டிய சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது
 
இந்த நிலையில் லிப்ட் மேன் மற்றும் குடியிருப்பில் உள்ள காவலர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வருணை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.