திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 5 நவம்பர் 2021 (12:52 IST)

காகித தொழிற்சாலையில் திடீர் தீ..! – விடிய விடிய எரிந்த தொழிற்சாலை!

குஜராத் மாநிலத்தில் உள்ள காதித தொழிற்சாலை ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டம் வாபி நகரில் மிகப்பெரும் காதித உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது. நேற்று நள்ளிரவு இந்த ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் தீ அணையாததால் மேலும் பல தீயணைப்பு வாகனங்களும் கொண்டு வரப்பட்டன. நான்கு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் விடிய விடிய எரிந்த தீயில் தொழிற்சாலையில் இருந்த உபகரணங்கள், மூலப்பொருட்கள் எரிந்து நாசமாயின.