1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 5 நவம்பர் 2021 (12:34 IST)

புனித் இறந்துட்டதை இன்னும் எங்களால நம்ப முடியல! – சூர்யா கண்ணீர் அஞ்சலி!

கன்னட திரை நடிகட் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார் நடிகர் சூர்யா.

கன்னடத்தில் புகழ்பெற்ற நடிகரும், பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகனுமான புனித் ராஜ்குமார் சில தினங்கள் முன்பாக மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் இந்திய திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அவரது உடலுக்கு கர்நாடக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு பெங்களூரில் உள்ள அவரது பெற்றோர்கள் நினைவிடங்களுக்கு அருகே அவரது உடலும் புதைக்கப்பட்டது.

தற்போது நடிகர் சூர்யா புனித் ராஜ்குமார் நினைவிடத்திற்கு சென்று கண்ணீருடன் அஞ்சலி செலுத்தியுள்ளார். பின்னர் பேசிய அவர் “புனித் இறந்து விட்டதை எனது தாய், தந்தை யாராலும் இன்னும் நம்ப முடியவில்லை. அவர் என்றும் சிரித்தபடி எங்கள் மனதில் இருப்பார்” எனக் கூறியுள்ளார்.