1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : புதன், 2 ஆகஸ்ட் 2023 (08:34 IST)

காதல் திருமணம் செய்பவர்கள் பெற்றோர் ஒப்புதல் பெற வேண்டும்: குஜராத்தில் புதிய சட்டம்..!

காதல் திருமணம் செய்பவர்கள் பெற்றோர்களின் ஒப்புதலை கட்டாயம் பெற வேண்டும் என்ற புதிய சட்டம் இயற்றுவது குறித்து ஆலோசனை செய்யப்படும் என குஜராத் மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். 
 
குஜராத்தில் காதல் திருமணங்கள் செய்பவர்கள் பெற்றோர் ஒப்புதலை பெறுவதை கட்டாயம் ஆக்குவது தொடர்பாக ஆய்வு செய்து சட்டம் இயற்றப்படும் என குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல் பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இன்று நடைபெற்ற பட்டார் சமூகம் சார்ந்து இயங்கும் சர்தார் பட்டேல் குழுவின் விழாவில் அவர் கலந்து கொண்ட போது இவ்வாறு பேசி உள்ளார். மேலும் அரசியல் அமைப்பின் எல்லைக்கு உட்பட்டு இந்த சட்டம் இயற்றப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
 
Edited by Mahendran