வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 28 ஜூலை 2023 (21:26 IST)

கல்லூரி மாணவியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற காதலன்!

love affair
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான  ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. தெற்கு டெல்லியில் மாளவிகா நகரில் உள்ள ஒரு கல்லூரி வளாகத்திற்குள் இன்று 25 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவர் இரும்புக் கம்பியால் தாக்கிப்  படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அப்பெண்ணின் சடலத்திற்கு அருகிக் இரும்புக் கம்பி ஒன்று கிடந்தது. இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருவதாக கூறினர்.

இந்த நிலையில், மாணவியை கொன்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். அந்த இளைஞனை  விசாரித்ததில், அப்பெண்ணும் இருவரும் காதலித்து வந்த  நிலையில்,  அவரை  திருமணம் செய்ய அப்பெண் வீட்டார் சம்மதிக்கவில்லை என்றும், தனக்கு வேலை இல்லாததால், அப்பெண் தன்னுடன் பேசுவதை நிறுத்திய ஆத்திரத்தில் இப்படி செய்ததாக கூறியுள்ளார்.

அந்த இளைஞர் அங்கு டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.