வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 31 ஜூலை 2023 (17:57 IST)

பிரபல நடிகையின் அந்தரங்க வீடியோவை வெளியிட்ட தயாரிப்பாளர்!

abuse
ஓடிசா  சினிமா தயாரிப்பாளர்களில்  ஒருவர்  தன் சக தயாரிப்பாளர் ஒருவரின்  படத்தில் நடிக்க சென்றதால்  பிரபல  நடிகையின் அந்தரங்க வீடியோவை வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஒடிசா சினிமா நடிகை ஒருவர் புவனேஸ்வரில் உள்ள லட்சுமிசாகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அப்புகாரில், நான் சினிமா படத் தயாரிப்பாளர் ஒருவருடன் நெருங்கிப் பழகினேன். அவருடன் நெருக்கமாக இருக்கும்போது எடுத்த புகைப்படங்கள் வீடியோக்களை எடுத்துக்கொண்டார்.

இந்த நிலையில், தற்போது எங்களின் அந்தரங்க வீடியோ புகைப்படங்களை அவர் சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இப்புகாரின் அடிப்படையில் போலீஸார் தயாரிப்பாளர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும், சினிமா நடிகை மற்றும் அவர் புகார் கூறியுள்ள தயாரிப்பாளரும் திருமணம் செய்துகொள்ளளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில், அவர் வேறொரு தயாரிப்பாளரின் படத்தில் நடிக்க சென்ற ஆத்திரத்தில் அவர் நடிகையின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.