வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 1 மே 2018 (11:13 IST)

நாரதர் அந்த காலத்து கூகுள்: என்னடா இது கூகுளுக்கு வந்த சோதனை...

குஜராத் முதல்வர் விஜய்ரூபானி நாரதரை அந்த காலத்து கூகுள் என பேசியுள்ளார். சமீப காலமாக வட இந்திய முதல்வர்கள் சர்ச்சையாக பேசிவருகின்றனர். 
 
மகாபாராத காலத்திலேயே, இன்டர்நெட், செயற்கைகோள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்று பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தினார் திரிபுரா முதல்வர்.
 
அதன் பின்னர், ஐஸ்வர்யா ராய்க்கு உலக அழகி பட்டம் கொடுத்ததில் நியாயம் இருக்கிறது. ஆனால் டயானா ஹெய்டனுக்கு உலக அழகி பட்டம் ஏன் கொடுத்தார்கள் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.  
 
இவை அனைத்திற்கும் மேல், படித்த இளைஞர்கள் வேலை தேடி அரசியல்வாதிகள் பின்னால் செல்லாமல், பீடா கடை வைத்து பிழைக்கலாம் அல்லது மாடு மேய்க்கலாம் என தெரிவித்தார்.
இவரை தொடர்ந்து இப்போது குஜராத் முதல்வர் விஜய்ரூபானி,  வேதங்களில் நாரதர் பற்றி எழுதப்பட்டுள்ளது. நாரதரானவர் இன்றைய கூகுளைப் போல. 
 
ஏனெனில் உலகில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது நாரதருக்கு தெரியும். நாரதர் அனைத்து தகவல்களையும் அறிந்து ஒட்டுமொத்த இந்த உலகத்துக்கே அதை தெரிவித்தவர் என கூறியுள்ளார். 
 
திரிபுரா முதல்வரின் சர்ச்சை பேச்சு காரணமாக மோடியும் அமித்ஷாவும் அவரை கண்டிக்க அழைப்பு விடுத்தது போல அடுத்த அழைப்பு குஜராத் முதல்வருக்குதான் அழைப்பு வரும் போல...