திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (08:34 IST)

கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சைக்கு கிடைத்த ரூ.2500 கோடி ஜாக்பாட்

உலகின் நம்பர் ஒன் தேடுதளமான கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓஆக இருப்பவர் தமிழரான சுந்தர் பிச்சை என்பது தெரிந்ததே. இவர் சி.இ.ஓ ஆன பின்னர் கூகுள் நிறுவனத்தின் வளர்ச்சி அபாரமாக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சுந்தர் பிச்சை சி.இ.ஓ ஆக பதவியேற்றபோது அவருக்கு கூகுள் நிறுவனத்தின் பங்குகள் சில அளிக்கப்பட்டது. தற்போது கூகுள் நிறுவனத்தின் பங்குகள் மிக அபாரமாக உயர்ந்துள்ளதால் சுந்தர் பிச்சையின் பங்குகளின் மதிப்பு மட்டும் ரூ.2500 கோடி உயர்ந்துள்ளதாகவும் இது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய ஜாக்பாட் என்றும் கூறப்படுகிறது.

சுந்தர் பிச்சையிடம் தற்போது கூகுள் நிறுவனத்தின் மூன்றரை லட்சம் பங்குகள் உள்ளது என்பதும் இந்த பங்குகளின் மதிப்புதான் தற்போது ரூ.2500 கோடி உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சுந்தர்பிச்சை மட்டுமின்றி கூகுள் நிறுவனத்தின் பங்குகள் வைத்திருக்கும் அனைவருக்குமே தற்போது கிடைத்துள்ளது உண்மையிலேயே ஒரு ஜாக்பாட்தான் என்று பங்குவர்த்தக நிபுணர்கள் கூறி வருகின்றனர்.