1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 9 ஏப்ரல் 2018 (16:28 IST)

மிட்-ரேஞ்ச் பிக்சல் ஸ்மார்ட்போன்: கூகுள் அறிமுகம்!

கூகுள் நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையில் மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களுடன் இணைந்து நெக்சஸ் பிராண்ட் ஸ்மார்ட்போனை விற்பனை செய்து வந்தது. 
 
தற்போது நெக்சஸ் பிராண்ட் மாற்றாக பிக்சல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில் கூகுள் நிறுவனம் மிட்-ரேஞ்ச் பிக்சல் ஸ்மார்ட்போனினை இந்த ஆண்டு அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. 
 
இது குறித்த சீன வெளியிட்டுள்ள தகவலின் படி, கூகுள் நிறுவனம் மூன்று பிக்சல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறதாம். இந்த மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன் டிசையர் என்ற குறியீட்டு பெயர் கொண்டிருக்குமாம்.
நெக்சஸ் ஸ்மார்ட்போன்கள் உயர் ரக சிறப்பம்சங்கள், ஸ்டாக் ஆன்ட்ராய்டு இயங்குதளம் மற்றும் குறைந்த விலை கொண்டிருந்தது. இந்த புதிய ஸ்மார்ட்போன் செர்ரிபிக் என அழைக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.