செவ்வாய், 27 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 10 ஆகஸ்ட் 2019 (13:28 IST)

அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து 4 பேர் பலி.. குஜராத்தில் நடந்த துயர சம்பவம்

அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து 4 பேர் பலி.. குஜராத்தில் நடந்த துயர சம்பவம்
குஜராத்தில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் நாதியாத் மாவட்டம், பிரகதிநகரில் இன்று அதிகாலை 3 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் அந்த வீடுகளில் தூங்கிகொண்டிருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிகொண்டார்கள்.

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு, இடிபாடுகளில் சிக்கிய 4 பேரின் சடலங்களை மீட்டனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்பதற்கு தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.