வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : வியாழன், 1 ஜூலை 2021 (17:17 IST)

ஜிஎஸ்டி வரி - 4 ஆண்டுகள் நிறைவு

இந்தியாவில் நடைமுறையில் உள்ள ஜிஎஸ்டி சட்டம் 2017 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பின் 2017 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் இது நடைமுறைக்கு வந்தது.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் ஜிஎஸ்டி சட்டம் நிறைவேற்றப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைகிறது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் கூறும்போது,  கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 66 கோடிக்கும் அதிகமான ஜிஎஸ்டி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் கலால் வரி, சேவை வரி,  வாட் போன்ற  17 உள்ளூர் வரிகள் மற்றும் 13 வகையான செஸ் வரிகளை ஒன்றுபடுத்தி, நாடு முழுவதும் ஒரே வகையான வரிவிதிப்பைக் மத்திய பாஜக அரசு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.