கேரளாவில் ரிலீஸாகாத ஷகீலா திரைப்படம் – காரணம் இதுதான்!
ஒருகாலத்தில் பிரபல மலையாள கதாநாயகர்களின் படங்களுக்கு இணையாக வசூலில் கொடிகட்டிப் பறந்தது ஷகிலாவின் படங்கள். மலையாளத்தில் மட்டும் இல்லாமல் தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் அவர் படங்கள் பலத்த வரவேற்பைப் பெற்றன. ஆனால் ஒரு கட்டத்தில் அந்த படங்களில் இருந்து விலகி நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பின்னர் அவருக்கு அந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. கவர்ச்சி நாயகியாக அறியப்பட்டு பல லட்சங்கள் சம்பாதித்தாலும், அதையெல்லாம் உறவினர்களிடம் நண்பர்களிடமும் பறிகொடுத்துவிட்டு இப்போது சாதாரண வாழ்க்கையைதான் அவர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
தற்போது அவரது வாழ்க்கை வரலாற்றுப் படத்தை ஷகீலா என்ற பெயரிலேயே பாலிவுட்டில் படமாக்கியுள்ளனர். இதில் ஷகீலாவின் கதாபாத்திரத்தில் நடிகை ரிச்சா தத்தா நடித்துள்ளார். மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் பங்கஜ் திரிபாதி நடித்துள்ளார். ஏப்ரல் மாதமே ரிலீஸாக வேண்டிய படம் கொரொனா லாக்டவுனால் கிறிஸ்துமஸ்ஸை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்தியில் மட்டும் இல்லாமல் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இப்போது இந்த படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி இளைஞர்களிடம் கவனத்தை ஈர்த்துள்ளது. ஷகீலாவின் கவர்ச்சி படங்களைப் பற்றிய கதையாக இல்லாமல் அவர் எதிர்கொண்ட சவால்களையும் துரோகங்களையும் இந்த படம் வெளிக்கொண்டு வரும் என சொல்லப்படுகிறது. வரும் டிசம்பர் 25 ஆம் தேதி இந்த படம் தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. ஆனால் ஷகீலாவை பிரபல நடிகையாக்கிய மலையாள சினிமாவில் இப்போது இந்த படம் ரிலீஸாகவில்லையாம். ஆனால் அதன் பின்னர் டப் செய்யப்பட்டு வெளியாகும் என சொல்லப்படுகிறது.