தடுப்பூசி போட்டால்தான் அரசின் நலத்திட்ட உதவிகள்- ஆளுநர் தமிழிசை
தடுப்பூசி போட்டால்தான் அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்லாம் என்ற நிலை உருவாகலாம் என தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் சீனாவில் முதன் முதலில் கொரொனா தொற்று உருவாகி இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவியது.
இத்தொற்றின் முதல் அலை முடிந்த நிலையில் தற்போது இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வருகிறது. சமீப நாட்களாக குறைவது போலிருந்து தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.
விரைவில் கொரொனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளது என அரசால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சில மாநிலங்களில் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அனைத்துத் தொழில்துறைகளும் கொரோனா வழிமுறைகளைப்பின்பற்றி செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புதுசேரி யூனியர் பிரதேச துணைநிலை ஆளுநரும் தெலுங்கான மாநில ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் கொரோனா தடுப்பூசி குறித்து ஒரு கருத்துத் தெரிவித்துள்ளார்.
அதில், தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் இருந்தால்தான் கல்வி நிலையங்களில் சேரலாம் என நிலை உருவாகலாம் எனவும், தடுப்பூசி போட்டால்தான் அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்லாம் என்ற நிலை உருவாகலாம் என தெரிவித்துள்ளார்.