1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 4 ஆகஸ்ட் 2021 (17:31 IST)

டோக்கியோ ஒலிம்பிக்: வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு கமல் பாராட்டு

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் மகளிர் குத்துச் சண்டைப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதித்துள்ளார். இதற்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்துகள் தெரிவித்து பாராட்டியுள்ளார்.

கடந்த மாதம் 23 ஆம்தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் ஒலிம்பிக் போட்டி தொடங்கியது.

இதில், சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் பதக்கப்பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.

இந்நிலையில், இந்தியாவைச் சேர்ந்த மீராபாய் பானு, பளுதூக்குதலில் வெள்ளிப்பதக்கமும், பிவி சிந்து, பேட்மிண்டனில் வெணகலப் பதக்கமும் வென்று சாதித்தனர்.

தற்போது ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ரவிகுமார் தாக்கியா அரையிறுதியில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். அதனால்  இப்போதைக்கு வெள்ளிப்பதக்க வாய்ப்பு பெற்றுள்ள அவர் தங்கப் பதக்கம் பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் மகளிர் குத்துச் சண்டைப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதித்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று தேசத்தை தலைநிமிரச் செய்த இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைனுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் எனத் தெரிவித்துள்ளார்.