1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 4 ஆகஸ்ட் 2021 (19:05 IST)

வங்கிக் கணக்கில் பணம் திருடப்பட்டால்..? போலீஸார் முக்கிய தகவல்

தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இக்காலத்தில் ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் நடைமுறை அதிகரித்து வருகிறது. அதேபோல், சிலர் வாடிக்கையாளர்களைத் தொடர்புகொண்டு வங்கியில் இருந்து பேசுவாதக் பொய்சொல்லி வங்கி எண், ஆதார் எண்களைக் கூறி அவர்களின் பணத்தைத் திருடுகிறார்கள். சிலர் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கிறார்கள்.

இந்தச் செயலால் பிரபல நடிகர்கள், முதற்கொண்டு பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதற்காக ஒரு திட்டத்தை காவல்துறை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது, வங்கிக் கணக்கில் இருந்து படம் திருடப்பட்டால் உரிய விவரங்களை வாடிக்கையாளர்கள்  155260 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவித்தால் யார் அந்தப் பணத்தைத் திருடினார்களோ அவர்களின் வங்கிக் கணக்கு உடனடியாக முடக்கப்பட்ம் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.