1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 24 ஜூன் 2023 (12:43 IST)

அணியில் இடம் கிடைக்காததால் துலிப் கோப்பை தொடரில் விளையாடும் புஜாரா!

இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்குப் பிறகு அடுத்து வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாட உள்ளது. இந்நிலையில் இப்போது அதற்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. டெஸ்ட் அணியில் தொடர்ந்து சொதப்பி வரும் புஜாரா நீக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தன்னை நிரூபித்து மீண்டும் அணிக்குள் வரவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ள புஜாரா இப்போது துலிப் கோப்பைக்கான போட்டிகளில் வெஸ்ட் ஸோன் அணிக்காக விளையாட உள்ளார். துலிப் கோப்பை காலிறுதி போட்டிகள் ஜூன் 28 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளன.

வெஸ்ட் ஸோன் அணி

பிரியங்க் பஞ்சால் (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், சேதேஷ்வர் புஜாரா, ஹர்விக் தேசாய் (விக்கெட் கீப்பர்), பிருத்வி ஷா, ஹெட் படேல் (விக்கெட் கீப்பர்), சர்ஃபராஸ் கான், அர்பித் வசவதா, அதித் சேத், ஷம்ஸ் முலானி, யுவராஜ் தோடியா, தர்மேந்திர சின்ஹ் சேகரியா, சித்தன் ஜடேஜா, , அர்சான் நாக்வாஸ்வல்லா