ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 24 ஜூன் 2023 (10:43 IST)

இந்திய அணியில் இடம் கிடைத்தது தெரியாமல் இங்கிலாந்தில் இருந்த வீரர்!

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் டெஸ்ட் தொடரில் முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால அவருக்கு பதில் நவ்தீப் சைனி 15 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பிரபலமான கப்பா டெஸ்ட் போட்டியில் சைனி விக்கெட்களை வீழ்த்தி கலக்கினார். ஆனால் காயம் காரணமாக அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இப்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம்பெற்றுள்ள நிலையில் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்ததே தெரியாமல் லண்டனில் ஒரு கவுண்ட்டி கிரிக்கெட் போட்டி விளையாடுவதற்காக சென்றுள்ளார். விமானத்தில் இருந்து இறங்கியதும்தான் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கும் சர்ப்ரைஸ் அவருக்கு தெரிய வந்ததாகக் கூறியுள்ளார்.