ரூ. 2.90 லட்சத்தில் தங்க மாஸ்க்: உள்ளூர் ஷங்கர மிஞ்சும் வடநாட்டு ஷங்கர்!

Sugapriya Prakash| Last Modified சனி, 4 ஜூலை 2020 (09:43 IST)
புனேவில் ஷங்கர் குரேட் என்பவர் ரூ. 2.90 லட்சத்தில் தங்க மாஸ்க் செய்து அதனை அணிந்து சுற்றுவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதேபோல தனிமனித இடைவெளியை பின்பற்றுவதும் அவசியமான ஒன்றாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் பூனேவில் ஷங்கர் குரேட் என்பவர் தங்கத்தில் மாஸ்க் செய்து அதனை அணிந்துக்கொண்டு வலம் வருகிறார். இந்த தங்க மாஸ்கின் மதிப்பு ரூ.2.90 லட்சம். இந்த மாஸ்கில் மூச்சு விடுவதற்காக சிறிய துளைகள் வைக்கப்பட்டுள்ளதாம். 
இது கொரோனாவில் இருந்து பாதுகாக்குமா என தெரியாது ஆனால் எனக்கு இதனை அணிவதில் எந்த பிரச்சனையும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். தற்போது இவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :