திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 13 நவம்பர் 2022 (17:43 IST)

தங்கத்தில் தோசை, தொட்டுக்க சட்னி, சாம்பார்: விலை என்ன தெரியுமா?

gold dosa
தங்கத்தில் தோசை, தொட்டுக்க சட்னி, சாம்பார்: விலை என்ன தெரியுமா?
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கத்தினால் செய்யப்பட்ட தோசைக்கு சட்னி சாம்பார் தொட்டுக்க கொடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. 
 
தங்கத்தில் அணிகலன்கள் செய்வார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் தங்கத்தில் தோசை செய்வது என்பது இதுவரை யாராவது கேள்விப்பட்டீர்களா. 
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள பிரபல உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா ஹோட்டலில் தங்க தோசை செய்து விற்பனை செய்யப்படுகிறது. மாவினால் செய்யப்பட்ட தோசையில் மேல் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. இந்த தோசையின் விலை ரூபாய் 1001 என்று விற்கப்பட்டு வருகிறது
 
இந்த தோசையை பலர் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். சாதாரண தோசைக்கு கொடுப்பது போலவே தங்கத்தினாலான இந்த தோசைக்கு சட்னி சாம்பார் தான் கொடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தங்கத்திலான தோசை குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
 
Edited by Siva