1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold rate in Chennai decreases

விலை குறைந்த தங்கம் & வெள்ளி – விவரம் உள்ளே!!

தமிழகம்
இன்று சென்னையில் தங்கம் விலை சற்று குறைந்து ஆறுதல் அளித்துள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று சென்னையில் தங்கம் விலை சற்று குறைந்து ஆறுதல் அளித்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.

நேற்று சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.39,240க்கு விற்பனை ஆனது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.4,905-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது.  

ஆம், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 குறைந்து ரூ.39,136 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.13 குறைந்து ரூ.4,892-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.30 காசுகள் குறைந்து ரூ.67.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 Edited By: Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
அடுத்த 2 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை – எங்கெங்கு?