தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?
- கால்வாய்களில் குப்பைகளை கொட்டினால் கடும் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
- சென்னையில் நடக்கும் அஜித்தின் துணிவு பட ஷூட்டிங்!
- கனமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: மேயர் ப்ரியா
- சென்னை விமான நிலையத்தில் 2000 கார் நிறுத்தும் பார்க்கிங்: எப்போது செயல்படும்?
தொடர்ந்து உயரும் தங்கம் விலை: இன்றைய சென்னை நிலவரம் என்ன?
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4820.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 40 உயர்ந்து ரூபாய் 38560.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5222.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41776.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 40 காசுகள் குறைந்து ரூபாய் 67.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 67000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
