செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 29 டிசம்பர் 2021 (08:44 IST)

கோவாவில் ரொனால்டோவுக்கு சிலை; அப்செட்டில் மெஸ்சி ரசிகர்கள்!

பிரபல போர்ச்சுக்கல் கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கோவாவில் சிலை வைக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் கால்பந்து பிரபலமான விளையாட்டு என்றாலும் ஐரோப்பிய நாடுகள் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் கால்பந்து மீதான மோகம் அதிகமாக உள்ளது. சமீப காலமாக கால்பந்து விளையாட்டிற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.

முக்கியமாக ரொனால்டோ, மெஸ்சி, நெய்மார் போன்றவர்களுக்கு உலக அளவில் பெரும் ரசிக பட்டாளமே உள்ளது. இந்நிலையில் கோவா தலைநகர் பனாஜியில் போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. கால்பந்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த சிலை வைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அமைச்சர் மைக்கெல் லோபா தெரிவித்துள்ளார்.

ஆனால் ரொனால்டோ சிலை வைத்தவர்கள் மெஸ்சிக்கு சிலை வைக்கவில்லை என மெஸ்சி ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளார்களாம். போர்ச்சுகலின் ஆதிக்கத்தில் கோவா முன்னதாக இருந்ததால் போர்ச்சுக்கல் வீரருக்கு சிலை வைத்துள்ளதாகவும் சிலர் குற்றம் சாட்டியுள்ளனராம்.