வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 27 டிசம்பர் 2021 (15:56 IST)

எஸ் பி ஜனநாதனின் சிலை திறப்பு விழாவில் விஜய் சேதுபதி உருக்கம்!

சமீபத்தில் மறைந்த இயக்குனர் எஸ் பி ஜனநாதனின் சிலை திறப்பு விழாவில் விஜய் சேதுபதி கலந்துகொண்டு உருக்கமாக பேசியுள்ளார்.

இயற்கை, ஈ, பேராண்மை மற்றும் புறம்போக்கு ஆகிய படங்களை இயக்கிய எஸ் பி ஜனநாதன் தனது கடைசி படமான லாபம் படத்தை இயக்கி முடிக்கும் முன்னரே இயற்கை எய்தினார். அதற்குப் பின்னர் அந்த படம் முடிக்கப்பட்டு ரிலிஸ் ஆனது. ஆனால் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாததால் படம் தோல்வி அடைந்தது.

இந்நிலையில் இப்போது இயக்குனர் எஸ் பி ஜனநாதனின் சேவையை பாராட்டும் விதமாக திரைத்துறையினர் அவரின் சிலை திறப்பு விழாவை நடத்தினர். அதில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி ‘ஜனநாதனின் கடைசி படத்தை தயாரித்தது நான் செய்த பாக்கியம். ஆனால் நான் தயாரித்த படமே அவரின் கடைசி படமாக ஆனது துரதிர்ஷ்டம்’ என உருக்கமாக பேசியுள்ளார்.