1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. seeman attack vijay in puduchery movie

என் எச்சிலில் அரசியல் செய்றான் ஒருத்தான்!.. விஜயை தாக்கிய சீமான்!...

seeman
நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கியதில் இருந்தே அவரை கடுமையாக விமர்சித்து வருபவர் சீமான்.. ஏனெனில் அதிமுக, திமுக போன்ற திராவிட கட்சிகளுக்கு நான்தான் மாற்று எனக் கூறி வந்தார் சீமான்..  விஜய் அரசியல் கட்சி தொடங்குவார் என சீமான் எதிர்பார்க்கவில்லை.
அதோடு விஜய் நம்மோடு கூட்டணி அமைப்பார்.. இருவரும் சேர்ந்து அதிமுக திமுக எதிர்க்கலாம் என்றெல்லாம் அவர் கணக்கு போட்டார்.. ஆனால் விஜய் திராவிடத்தை தூக்கிப் பிடித்ததால் அவரை கடுமையாக விமர்சிக்க தொடங்கினார் சீமான்..

ஒருபக்கம் சீமான் ஏற்கனவே நாம் தமிழர் கூட்டங்களில் பேசிய பேச்சை கொஞ்சம் மாற்றி விஜய் தற்போது பேச தொடங்கியிருக்கிறார். இந்நிலையில், நேற்று புதுச்சேரியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் பேசிய சீமான் ‘ஒருத்தர் கட்சி எதுக்காக ஆரம்பிச்சிருக்கார்னு அவருக்கே தெரியல... உங்க சின்னம் என்னன்னு கேட்டா அவரோட முகத்தை காட்டுறாரு..

அறிவு சார்ந்த சமூகம் சிந்திக்க வேண்டும்.. நல்ல கொள்கை இருப்பவர்கள்தான் அரசியலுக்கு வர வேண்டும்’ என்று பேசினார். இன்னொரு மேடையில் பேசியபோது ‘ஒருத்தன் எனது எச்சிலில் அரசியல் செய்து கொண்டிருக்கிறான்.. நான் இன்னைக்கு ஒன்னு பேசினா அதை அவன் அடுத்த நாள் மேடையில் பேசி அது அவனோட சொந்த கருத்து மாதிரி பேசுறான்.. நான் தத்துவமா சொன்னா அதை அவன் கதை மாதிரி சொல்றான்’ என பேசியிருக்கிறார்..
அடுத்த கட்டுரையில்
விஜயிடம் பேசிய பவன் கல்யாண்!. என்.டி.ஏ. கூட்டணியில் தவெக?!.. பரபர அப்டேட்..