வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 27 டிசம்பர் 2021 (10:41 IST)

முடிவிலா தொடர்கதையாய்... மீண்டும் பெரியார் சிலை சேதம்!!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது.

 
பெரியார் சிலையை அவமதிப்பது தமிழகத்தில் அவ்வப்போது நடந்து வருகிறது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையம் அருகே பெரியார் சிலை சேதப்பட்டுத்தப்பட்டுள்ளது. பெரியார் சிலையின் முகம் சிதைக்கப்பட்டும், மூக்கு கண்ணாடி உடைக்கப்பட்டும் இருந்தது. இத்னால் காவல் துறையினர் சிலையை துணியால் மறைத்தனர்.
 
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் போலீஸாரிடம் சரண் அடைந்தார். பெரியார் சிலையை சேதப்படுத்திய செல்லக்கிளி என்பவர் போலீசில் சரண் அடைந்தார். சரணடைந்த செல்லக்கிளியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.