மீண்டும் டிரெண்டாகும் 'கோ பேக் மோடி': வழியனுப்பு விழாவா?
பிரதமர் மோடி ஒவ்வொரு முறை தமிழகம் வரும்போதும் தமிழக அரசியல் கட்சிகள் 'கோ பேக் மோடி' என்று கூறி அவருக்கு கருப்புக்கொடி காட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளன. குறிப்பாக டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் 'கோ பேக் மோடி' என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டாகும்
இந்த நிலையில் இன்று மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மோடியின் எதிர்கால தலைவிதியை நிர்ணயிக்கும் இன்றைய நாளிலும் 'கோ பேக் மோடி' என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகியுள்ளது. மோடியே விடை பெறுங்கள், பொய்களின் நாயகனே விடை பெறுங்கள்' போன்ற டுவிட்டுக்கள் பதிவாகி வருகின்றன.
இன்னும் சில மணி நேரத்தில் மோடி வீட்டுக்கு அனுப்பப்படுவாரா? அல்லது மீண்டுமொருமுறை அரியணையில் ஏறுவாரா? என்பது தெரிந்துவிடும்.