இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் ? இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை...

india election result
Last Modified வியாழன், 23 மே 2019 (06:31 IST)
கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கிய இந்திய மக்களவைத் தேர்தல்  மே 19 ஆம் தேதிவரை 7 கட்டங்களாக நடைபெற்றன. உலகமே உற்றுக்கவனித்துக்கொண்டிருக்கும் இந்தியாவின் தலைவிதியைத் தீர்மானிக்கப்போகும் அடுத்த பிரதமர் யார் ? அடுத்ததாக ஆட்சிக்கட்டிலில் அமரப்போவது யார் என்பதுகுறித்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் காலை  8 மணிக்கு தொடங்கவுள்ளன.
இதுகுறித்த சில முக்கியத் தகவல்களை இப்போது காணலாம் :
 
இன்று நடைபெறவுள்ள வாக்குப்பதிவு எண்ணிக்கை மையங்களில்  11, 659 ஊழியர்கள் , 4,245 நுண்பார்வையாளர்கள் என நாடுமுழுவதும்  மொத்தம்  15, 904 பேர் மின்னணு வாக்குகளை எண்ணவுள்ளனர்.நாடுமுழுவதும் 20, 600 விவிபேட் இயந்திரங்களின் ஒப்புகைச்சீட்டுகள் சரிபார்க்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
தேர்வான விவிபேட் இயந்திரங்களின் தனியாக வைக்கப்படும் என தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
 
விவிபேட் இயந்திரம் எவை என்பது காலை 8மணிக்கு கண்னி மூலம் ரேண்டம் முறையில் தேர்வு செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் கூறியுள்ளதாவது :
 
தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண வழக்கத்தைவிட அதிகமான அவகாசம் தேவைப்படும்.மக்களவைத் தேர்தல் முடிவை அறிவிப்பதில்  5மணி நேரம்  தாமதம் ஏற்படலாம் என்று தெரிவித்தனர்.
 
இந்நிலையில் ஒரு பேரவை தொகுதிக்கு 5 விவிபேட் ஒப்புகைச்சீட்டு எண்ண தனி கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில்பதிவான வாக்குகள் ஒவ்வொரு மையத்திலும்  14 மேஜைகள் எண்ணப்படும்.
 
அரசியல் கட்சி வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கும் எண்ணும் மையத்தில் செல்போன் எடுத்து செல்ல தடைவிதிக்கப்படுள்ளது. பேப்பர், நோட்பேட், பேனா , பென்சில் போன்றவற்றை எடுத்துச்செல்லவும் அனுமதி தரப்பட்டுள்ளது.
 
முகவர் வாக்குஎண்ணும் மையத்திலிருந்து 100 மீட்டருக்கு மேல் வெளியில் சென்றுவிட்டால் மீண்டும் அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஒருமேஜைக்கு 1 முகவர் , 2 கூடுதல் முகவர் என ஒரு வேட்பாளருக்கு 16 முகவர்கள் அனுமதிக்கப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது.
 
நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உள்பட 8039 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
 
இதில், மக்களவைத் தேர்தலில் பாஜக 435, காங்கிரஸ் 420 தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறங்கியது. 
 
நம் தமிழகத்தில் வேலூர் மக்களவை தொகுதி தவிர  நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக  தேர்தல் நடைபெற்றது.
 
மேலும் தமிழகத்தில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் 45 மையங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி சென்னை முழுவதும் சுமார் 15000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். சென்னையில் ராணிமேரி கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலையில் உள்ள மையங்களில் வாக்குகள் எண்ணப்படும்.
 
வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அதுமட்டுமன்றி சென்னையில் உள்ள பிரபல தலைவர்களின் வீடுகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :