செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 29 நவம்பர் 2023 (18:22 IST)

திருமணம் செய்ய மறுத்த காதலியின் கழுத்தை பிளேடால் அறுத்த நபர்.. அதிர்ச்சி சம்பவம்..!

திருமணம் செய்ய மறுத்த காதலியின் கழுத்தை பிளேடால் அறுத்த  நபரால் மும்பையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பையை சேர்ந்த நபர் ஒருவர்  இளம்பெண்ணை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் திடீரென திருமணம் செய்து கொள்ளலாம் என்று காதலன் கூறிய நிலையில் அந்த பெண், சகோதரர்களுக்கு பயந்து மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்ட போது  அந்த பெண் பலர் முன்னிலையில் அவமானப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த காதலர், திடீரென அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து அவரது கழுத்தை அறுத்துவிட்டு தப்பி சென்றுவிட்டார்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அந்த பெண்ணை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காதலரை கைது செய்து  விசாரணை செய்து வருகின்றனர்

Edited by Siva