திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 28 நவம்பர் 2023 (15:05 IST)

மைனர் மகள்களை காதலர்களுக்கு விருந்தாக்கிய தாய்.. 40 ஆண்டு கடுங்காவல் தண்டனை..!

மைனர் மகள்களை காதலர்களுக்கு விருந்தாக்கிய தாய்க்கு நாற்பது ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 கடந்த 2018 ஆம் ஆண்டு  தனது இரண்டு குழந்தைகள் மற்றும் கணவருடன் வசித்து வந்த பெண் ஒருவர் கணவனை பிரிந்த பிறகு இரண்டு காதலர்களுடன் மாறி மாறி வசித்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில்  தனது 7 வயது குழந்தை மற்றும் 11 வயது குழந்தை ஆகிய இருவரையும் தனது காதலர்களுக்கு தாயே விருந்தாக்கியதாக தெரிகிறது. இதை வெளியில் சென்றால் கொன்று விடுவேன் என்று மிரட்டிய நிலையில் குழந்தைகள் வெளியே சொல்லவில்லை.

ஒரு கட்டத்தில் 11 வயது குழந்தை தனது தங்கையுடன் தப்பித்து அவர்களின் பாட்டி வீட்டுக்கு சென்று நடந்த சம்பவத்தை கூறியுள்ளனர். இதனை அடுத்து தேசிய குழந்தைகள் நல ஆணையம் இதில் தலையிட்டு  அந்த சிறுமிகள் தாய் மீது வழக்கு தொடர்ந்தனர்.

இதுகுறித்து வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் அந்த பெண்ணுக்கு 40 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து கேரள சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. .

Edited by Siva