1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 29 நவம்பர் 2023 (13:42 IST)

காதலன் செல்போனில் 13000 ஆபாச புகைப்படங்கள்: அதிர்ச்சியில் காதலி செய்த செயல்..!

காதலனுடைய செல்போனில் 13,000 ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்ததை பார்த்த காதலி துணிச்சலுடன் எடுத்த முடிவு  பாராட்டத்தக்கதாக உள்ளது.
 
பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் 22 வயது பெண் தன்னுடன் பணிபுரிந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்தார். இந்நிலையில் தற்செயலாக காதலனின் செல்போனை உள்ளே சென்று பார்த்தபோது அதில் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்தது.

சுமார் 13,000 மேற்பட்ட புகைப்படங்கள் இருந்தது என்றும் அதில் தன்னுடைய புகைப்படமும், தன்னுடைய அலுவலகத்தில் இருந்த மற்ற பெண்களின் ஆபாச புகைப்படங்கள் இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதனை அடுத்து அவர் உயர் அதிகாரியிடம் இதுகுறித்து ஆலோசனை செய்த போது உயர் அதிகாரி சம்பந்தப்பட்ட இளைஞர் மீது சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தினார்.

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர்  இளம் பெண்ணின் காதலரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் அவருடைய  செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை அடுத்து இளம் பெண் செய்த துணிச்சலான நடவடிக்கைக்கு அலுவலகத்தில் உள்ளவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Edited by Mahendran