திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (21:33 IST)

பரிசாக கிடைத்த ஹோம் தியேட்டர் வெடித்து 2 பேர் பலி

சத்தீஸ்கர் மாநிலத்தில் திருமண பரிசாகப் பெற்ற ஹோம் தியேட்டர் வெடித்து விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் கபீர்தாம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹேமேந்திரா என்ற நபர்( 22வயது). இவரது திருமணம்  கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் இவருக்குப் பரிசு கொடுத்தனர்.

அதன்பின்னர், திருமணத்திற்குப் பரிசாகக் கிடைத்த பரிசுப் பொருட்களை  ஹேமந்த் குடும்ப உறுப்பினர்கள் வீட்டில் அவிழ்த்துக் கொண்டிருந்தான்ர். அப்போது, பரிசாக வந்த ஹோம் தியேட்டர் சிஸ்டத்திற்கு மெராவி மின் இணைப்பு கொடுத்தார்.

இந்த மின் இணைப்பு கொடுத்ததும் திடீரென்று அந்த மியூசிக் சிஸ்டம் வெடித்தது. இந்த திடீர் விபதிதில், மெராவி சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும், அவரது சகோதரர் ராஜ்குமார், சிறுவர் ஒருவன் உட்பட 4 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் காயமடைந்த மெராவியின் சகோதரர்  சிகிச்சை பலனின்றி பலியானார்.

இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.