மாவோயிஸ்ட் பகுதியில் 12 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த போலீஸார்
சத்திஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஸ் பாகட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.
வனப்பகுதிகள் அதிகமுள்ள இங்கு சத்திஸ்கர் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
குறிப்பாக இங்குள்ள சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் செய்ல்பட்டு வருகின்றனர்.
சாமீபகாலமாக போலீஸார், மக்கள், அரசியல் தலைவர்கள் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை உருவானது. எனவே மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நல்ல நிலையை உருவாக்க சி.ஆர்.பிஎஸ் வீரர்கள் முயன்றனர்.
அதன்படி, சுக்மா மாவட்டத்தில் 12 ஜோடிகளுக்கு சி.ஆர்.பிஎஃப் வீரர்கள் திருமணம் நடத்தி வைத்தனர்.
இத்திருமணத்தில் ஒரு ஜோடிக்கு ரூ.1100 மற்றும் 12 ஜோடி புடவைகளைப் பரிசாக வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சி.ஆர்.பிஎஃப் தளபதி டிஎன். யாதவ் புதிதாக திருமணம் செய்து கொண்ட ஜோடிகளுக்கு வாழ்த்துகள் கூறி பேசினர்.
சி.ஆர்.பிஎஃப் படை வீரர்களின் செயலுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.