புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (20:12 IST)

பிரைன் லாராவின் சாதனையை முறியடித்த கெய்ல்...

எந்த ஒரு வீரருக்கும் தனது 300 வது போட்டியில் விளையாடுவது சற்று பெருமையான விஷயம்  ஆகும். தற்போது இந்த சாதனையை செய்திருப்பவர் கிறிஸ் கெயில்  ஆவார். இவர் 300 வது போட்டியில் விளையாடியதுடன் முன்னாள் மேற்கிந்திய கிரிக்கெட் அணி கேப்டன் லாராவின் சாதனையை முறியடித்துள்ளார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான 2வது ஒரு நாள் போட்டி டிரினிடாட்டில் நடைபெற்றது. இது கெய்லுக்கு 300 வது போட்டியாகும். இதில் ரசிகர்களை எதிர்பார்ப்பை பொய்யாக்கிய கெயில் வெறும் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முக்கியமாக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த பிரைன் லாராவின் சாதனையை முறியடித்துள்ளார். 
 
லாரா 299 போட்ட்யில் விளையாடி 10 405 ரன்கள் குவித்துள்ளார்.  கிறிஸ் கெயில் நேற்றைய போட்டியில் 9 ரன் எடுத்தபோது 10 406 ரன்கள் சாதனையை முறியடித்துள்ளார்.