3-0 என மேற்கிந்திய தீவுகள் அணியை வாஷ் அவுட் செய்த இந்திய அணி

Last Updated: புதன், 7 ஆகஸ்ட் 2019 (07:29 IST)
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் மேற்கிந்திய தீவுகள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணியுடன் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே நடைபெற்ற இரண்டு டி20 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை முழுமையாக இந்திய அணி வென்றது. சொந்த மண்ணில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் வாஷ் அவுட் ஆனது அந்நாட்டு ரசிகர்களை மிகுந்த அதிருப்தியை உள்ளாக்கியுள்ளது

நேற்றைய போட்டியில் முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்தது.
பொல்லார்டு 58 ரன்களும் பவல் 32 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல் மற்றும் தவான் ஆகியோர் சோபிக்கவில்லை என்றாலும் அதன்பின் களமிறங்கிய விராத் கோஹ்லி மற்றும் ரிஷப் பண்ட் அருமையாக விளையாடினர். கேப்டன் விராட் கோலி 59 ரன்களும், ரிஹப் பண்ட் 65 ரன்களும் எடுத்தனர்

இந்த போட்டியில் மிக அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்திய தீபக் சஹார் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் இந்த தொடரின் நாயகனாக க்ருணால் பாண்ட்யா தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, மூன்று டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது


இதில் மேலும் படிக்கவும் :