செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 21 ஜனவரி 2021 (16:47 IST)

ராமர் கோவில் கட்ட ரூ.1 கோடி கொடுத்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!

ராமர் கோவில் சம்பந்தப்பட்ட வழக்கு சமீபத்தில் முடிந்த நிலையில் அங்கு ராமர் கோயில் கட்டும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 
 
இந்த நிலையில் ராமர் கோவில் கட்டுவதற்காக பல பிரபலங்கள் பெரும் தொகைகளை நன்கொடையாக கொடுத்து வருகின்றனர். சமீபத்தில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் கூட தனது சார்பாக ஒரு பெரிய தொகையை நன்கொடையாக கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், தற்போதைய பாஜக எம்பியுமான கவுதம் காம்பீர் ரூபாய் ஒரு கோடி அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிக்கு வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 
 
இதுகுறித்து கவுதம் காம்பீர் கூறுகையில் ’சிறப்பான முறையில் ராமர் கோவில் கட்டுவது என்பது அனைத்து இந்தியர்களின் கனவு என்றும் பல ஆண்டுகளாக நிலவி வந்த இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது ஒற்றுமைக்கும் அமைதிக்கும் வழி ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் கூறியுள்ளார் எனது குடும்பத்தினர் சார்பாக இந்த சிறிய தொகையை பங்களிப்பாக வழங்கி உள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்