அதிமுகவுக்கு டாடா நிறுவனம் தேர்தல் நன்கொடை! – சூடுபிடிக்கும் தேர்தல் பணிகள்!

ADMK
Prasanth Karthick| Last Modified செவ்வாய், 3 நவம்பர் 2020 (11:26 IST)
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் டாடா குழுமம் அதிமுகவிற்கு தேர்தல் நன்கொடை வழங்கியுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதம் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் தேர்தலுக்கு செலவு செய்ய ஏகமாய் பணம் தேவை என்ற நிலையில் தேர்தல் நன்கொடையும் பல கட்சிகள் பெற தொடங்கியுள்ளன.

இந்நிலையில் டாடா குழுமத்தின் தேர்தல் அறக்கட்டளை சார்பில் அதிமுகவிற்கு ரூ.46.78 கோடி நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கட்சிகளுக்கான நன்கொடை விவரங்களை பட்டியலிட்ட தேர்தல் ஆணையம் இதை வெளியிட்டுள்ளது. தனிநபர் அல்லது நிறுவனத்தால் கட்சிகளுக்கு வழங்கப்படும் ரூ.20,000 ஆயிரத்தை தாண்டிய மொத்த பங்களிப்புகளில் இது 90% ஆகும்.

முன்னதாக கடந்த 2018-2019 ஆண்டுகளில் இந்த டாடா குழுமத்தின் தேர்தல் அறக்கட்டளை சார்பில் பாஜகவிற்கு ரூ.356 கோடியும், காங்கிரஸிற்கு ரூ.55.6 கோடியும் நன்கொடையாக அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :