செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 27 டிசம்பர் 2020 (16:56 IST)

படித்த பள்ளிக்கு ரூ.2 கோடி நன்கொடை கொடுத்த முன்னாள் மாணவர்!

படித்த பள்ளிக்கு ரூ.2 கோடி நன்கொடை கொடுத்த முன்னாள் மாணவர்!
தான் படித்த பள்ளிக்கு முன்னாள் மாணவர் ஒருவர் ரூபாய் 2 கோடி நன்கொடை அளித்து விட்டு தனது பெயரை விளம்பரப்படுத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
தூத்துக்குடியில் உள்ள சுப்பையா வித்யாலயா என்ற பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் ஒருவர் தற்போது மிகப்பெரிய பணி பணியில் வசதியாக உள்ளார். இந்த நிலையில் தான் படித்த பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பிய அவர் ரூபாய் 2 கோடி மதிப்பிலான சொத்துக்களை நன்கொடையாக வழங்கியுள்ளார் 
 
இந்த சொத்து மூலம் அந்த பள்ளிக்கு மாதம் 50 ஆயிரம் வருமானம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவ்வளவு பெரிய தொகையை நன்கொடையாக கொடுத்து விட்டு தன்னுடைய பெயரை வெளியில் குறிப்பிட வேண்டாம் என்றும் அவர் ஒரு அன்பு நிபந்தனையாக வைத்துள்ளார் 
 
இந்த தகவலை இந்த பள்ளியின் செயலாளர் முரளிதரன் அவர்கள் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ரூபாய் 2 கோடி மதிப்புள்ள சொத்தை நன்கொடையாக அளித்த அந்த முன்னாள் மாணவர் கடந்த 1973 ஆம் ஆண்டு முதல் 1978 ஆம் ஆண்டு வரை ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை அந்த பள்ளியில் படித்தவர் என்றும், அவர் தனது பெயர் மற்றும் விவரத்தை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால் அவரது பெயரை வெளியிட விரும்பவில்லை என்று தெரிவித்த பள்ளி நிர்வாகி, அவருக்கு நன்றி செலுத்தி கொள்வதாகவும் இந்த தொகை முழுக்க முழுக்க ஏழை மாணவர்களின் கல்விக்காக பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
தான் படித்த ஒரு பள்ளிக்கு முன்னாள் மாணவர் ஒருவர் ரூபாய் 2 கோடி நன்கொடை அளித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது