புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 9 ஏப்ரல் 2020 (11:16 IST)

நம்ம ஊரு ஆறா இது? கண்ணாடி மாதிரி இருக்கே! – ஆச்சர்யத்தில் மக்கள்

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வட மாநிலத்தில் ஆறுகள் மிகவும் சுத்தமாக மாறியுள்ளது மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் அடைந்துள்ள நிலையில் நாட்டில் பெரும் தொழிற்சாலைகள் உட்பட அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் வடமாநில ஆறுகளான கங்கை, யமுனை நதிகளில் தண்ணீர் மிக தெளிவாக சுத்தமானதாக மாறியுள்ளது மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

டெல்லியை கடந்து செல்லும் யமுனை ஆறும், உத்தர பிரதேசம் வழியாக வாரணாசி உள்ளிட்ட பகுதிகளை கடந்து செல்லும் கங்கை ஆறும் மிக தூய்மையாக உள்ள வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.