1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 23 டிசம்பர் 2021 (08:46 IST)

ஜனவரியில் ஏழுமலையான் தரிசனம்: இன்று முதல் முன்பதிவு என தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி கோவிலில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க ஒவ்வொரு மாதமும் திருப்பதி திருமலை தேவஸ்தானம் மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில் ஜனவரி மாத இலவச மற்றும் 300 ரூபாய் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஜனவரி மாதம் 12, 13-ஆம் தேதி முதல் 22ம் தேதி வரையிலும் ஜனவரி 26 தேதியிலும் ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் ஆன்லைன் சேவைகளுக்கு டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய இன்று மாலை தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் ஜனவரி 1 மற்றும் ஜனவரி 13-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை தரிசனம் செய்ய 20 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்றும் ஜனவரி இரண்டாம் தேதி முதல் 12ம் தேதி வரையிலும் 23ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையிலும் ஏழுமலையானை தரிசிக்க 300 ரூபாய் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்றும் இன்று காலை 9 முதல் ஆன்லைனில் இந்த டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது