வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (08:28 IST)

இந்தியாவில் தனியார் ரயில் சேவை; போட்டிபோடும் நிறுவனங்கள்!

இந்தியாவில் தனியார் ரயில்கள் இயக்க நடத்தப்பட உள்ள ஏலத்தில் கலந்து கொள்ள 23 நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

நாடு முழுவதும் 12 முக்கிய நகரங்களில் இருந்து 109 வழித்தடங்களில் தனியார் ரயில் சேவைகளை தொடங்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இதற்கான முதற்கட்ட விண்ணப்ப கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்ற நிலையில் ஸ்டெர்லைட் பவர், பஜாஜ் ஃபோர்ஜ் உள்ளிட்ட 23 தனியார் நிறுவனங்கள் ரயில்களை இயக்க விண்ணப்பித்துள்ளன. சுமார் 30 ஆயிரம் கோடி தனியார் மூதலீட்டில் மேற்கொள்ளப்படும் இந்த தனியார் ரயில் சேவைகளுக்கான ஏலம் இரண்டு பகுதிகளாக நடைபெறும் எனவும், மார்ச் 2023க்குள் தனியார் ரயில் சேவைகள் தொடங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதே சமயம் இது ரயில்வேயை தனியார் மயமாக்கும் முயற்சியல்ல. வழக்கமான ரயில் சேவைகளுடன் கூடுதல் சேவையாகவே தனியார் ரயில்கள் இயக்கப்படுகின்றன என்றும் அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.