1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (19:32 IST)

காஷ்மீரில் 11 மாதங்களுக்கு பின்னர் ரயில் சேவை தொடக்கம்

காஷ்மீரில் 11 மாதங்களுக்கு பின்னர் ரயில் சேவை தொடக்கம்
காஷ்மீரில் 11 மாதங்களுக்கு பின்னர் ரயில் சேவை தொடங்கியுள்ளதை அடுத்து அம்மாநில மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் ரயில் சேவை தொடங்கி உள்ள நிலையில் தற்போது 11 மாதங்களுக்கு பின்னர் காஷ்மீரிலும் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது
 
இதுகுறித்து ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பனிகல் மற்றும் பாரமுல்லா நகர்கள் இடையே முதல் கட்டமாக ரயில் சேவை தொடங்க உள்ளது என்றும் இது சுற்றுலாத் துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில் இருக்கும் என்றும் கூறியுள்ளார் 
 
மேலும் காஷ்மீர் மாநிலத்தில் ரயில் சேவையின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார் இதனால் காஷ்மீர் மாநில மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்