வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 14 செப்டம்பர் 2022 (18:00 IST)

ஒரு மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து தற்கொலை: இரண்டு தோழிகளின் பரிதாப முடிவு!

suicide
ஒரு மணி நேரத்தில் இரண்டு தோழிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புனே என்ற பகுதியில் 17 வயது இளம்பெண்கள் இருவர் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனர்
 
ஒரு இளம்பெண் ஆறு முப்பது மணிக்கு தற்கொலை செய்த நிலையில் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் அவரது தோழி இரவு ஏழு முப்பது மணிக்கு தற்கொலை செய்து கொண்டார்
 
இருவரும் எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் 
 
சிறுவயதிலிருந்தே பழகிய தோழிகள் இருவர் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது