1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 11 செப்டம்பர் 2022 (12:50 IST)

11-வது மாடியில் இருந்து குதித்த இரு சகோதரிகள், ஒருவர் பரிதாப பலி: அதிர்ச்சி காரணம்!

suicide
டெல்லியில் இரண்டு சகோதரிகள் 11வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த நிலையில் அவர்களில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டதாகவும் மற்றொருவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
டெல்லியில் உள்ள சுதா என்பவரின் மகள்கள் நிக்கி மற்றும் பல்லவி. இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க தாய் சுதா முடிவு செய்ததாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் தங்களுக்கு திருமணம் வேண்டாம் என்று கூறியிருந்த நிக்கி மற்றும் பல்லவியை தாய் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறியதால் மனமுடைந்தனர். இதனை அடுத்து இன்று அதிகாலை 4 மணிக்கு சகோதரிகள் இருவரும் தங்கள் வீட்டின் அருகில் உள்ள 11 வது மாடி கட்டிடத்திற்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளனர் 
 
இவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும் மற்றொருவர் மருத்துவமனையில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் மற்றும் கொள்ளை