திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (21:58 IST)

பிரபல பாடலாசிரியர் மகள் தூக்கில் தொங்கி தற்கொலை: அதிர்ச்சி தகவல்

thoorigai
பிரபல பாடலாசிரியர் மகள் தூக்கில் தொங்கி தற்கொலை: அதிர்ச்சி தகவல்
பிரபல பாடலாசிரியரின் மகள் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழ் திரையுலகின் பிரபல பாடலாசிரியர் வேறு ஒருவருடன் இவர் ஏராளமான திரைப்படங்களுக்கு பாடலை எழுதியுள்ளார் என்பதும் அவரது பெரும்பாலான பாடல்கள் சூப்பர் ஹிட்டாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திரைப்பட பாடலாசிரியர் கபிலன் மகள் தூரிகை என்பவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
பல்வேறு திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய தூரிகை தற்கொலை செய்தது ஏன் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.